Wednesday, July 25, 2018

ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும்

Tuesday, April 18, 2017

ஏப்., 23ல் ‘செட்’; 60 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்!

உதவி பேராசிரியர் பணிக்கான, ’செட்’ நுழைவு தேர்வு, வரும், 23ல் நடக்கிறது. இதில், 60 மையங்களில், 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

Thursday, April 6, 2017

தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் அறிக்கை

தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் அறிக்கை
👇👇👇👇👇👇👇👇
💥தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் க்கு பின்பு சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்,அரசு உதவி பெறும் (non-minority) ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதிதேர்வு எழுதவேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது.பல்வேறு காலகட்டங்களில் துணிந்து போராடியது நமது பேரியியக்கம்.
💥2012ல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 599 பேரை அரசு பணிநீக்கம் செய்தது.நம்து இயக்கம் தொடர்ந்த வழக்கில் தடையாணை பெற்று பின்பு நீதி மன்றம் உடனடியாக அவர்களை பணியில் சேர்க்கவேண்டும் என தீர்ப்பளித்தது.இதன்விளைவாக பணியில அரசு் சேர்த்தது.இன்று வரை பணபலன்களை பெற்று வருகின்றார்கள்.இது தகுதித்தேர்வுக்கே பலத்த அடி கொடுத்தது நமது பேரியியிக்கம்.......
💥2011ல் மே மாதம் சீனியாரிட்டி அடிப்படையில் 3200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது....அதே ஆண்டு நவம்பர் மாதம் 300 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.. இவர்கள் அனைவருக்கும் டிசம்பர் மாதம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது....ஆனால் அரசு மே மாதம் சான்றதழ் சரிபார்க்கப்பட்ட வர்களுக்கு பணிவரன்முறை ,தகுதிகாண்பருவம் என அனைத்தும் வழங்கியது......
💥 முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை,தகுதிகாண் பருவம் என முடித்து தராமல் அரசு அவர்கள் வயிற்றில் அடித்தது......முன்னுரிமை அடிப்படையில் முன்னால் இராணுவத்தினர்,கலப்பு திருமனம் செய்தவர்கள்,மாற்றுத்திறனாளிகள்,விதவைகள்,கணவனால் கைவிடப்பட்டவர்கள்,அருந்ததியினர்,அரசுக்கு நிலத்தை தானம் கொடுத்தவர்கள்-----முன்னுரிமையில் நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்வு எதற்கு----முன்னுரிமை என்றால் என்ன என இயக்கம் அரசிடம் போராடியது...தினம்தோறும் இயக்கம் DPI,,முதன்மை செயலர்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ,தமிழக முதல்வர் ,பத்திரிக்கை செய்தி என்று என்று வந்தவன்னம் செய்தனர்.......ஏமாற்றமே மிஞ்சியது
💥2016ல் மீண்டும் அம்மா அவர்கள் பதவியேற்றபோது ஜாக்டோ-ஜியோ அமைப்புகள் போராட்டம் என இறங்காதபொழுது ----தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அம்மா அவர்கள் பதிவியேற்ற ஒரு மாதத்திலே பத்து அம்ச கோரிக்கையை வளியுறுத்தி முதன்மைக்கோரிக்கையான தகுதிதேர்விலிருந்து சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் பெற்றவர்களுக்கு விலக்களிக்கவேண்டும் என மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.........
💥 இவ்வளவும் நடத்தி வெற்றிபெற முடியாததால் இறுதியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரான மதிப்பு மிகு.சங்கரன் அவர்கள் மூலம் நம்பேரியியக்கம் வழக்கு தொடரப்பட்டது.....
💥தகுதித்தேர்வால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை காப்பாற்றவேண்டும் என என் அருமைத் தலைவர் அ.மாயவன் அவர்களும்,மாநிலத் தலைவர் திரு.பக்தவச்சலம் அவர்களும் சொந்தவேலைகளையும்,குடும்பத்தையும் தவிர்த்து ஒவ்வொரு மண்டலமாக சென்று கணக்கெடுத்து பாதிக்கப்பட்டவர்களின் விளக்கத்தையும் பெற்று அரும்பாடு பட்டிருக்கிறார் என்பதையும் இந்த வேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.....
💥இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இந்த மாதம் 5 -ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது--இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த அரசு பட்டதாரி ஆசிரியர்கள்,சிறுபான்மையற்ற (non-minority) பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் இன்பசெய்தியாக வரும்,வாழ்வில் சந்தோசம் பொங்கும்,மன உளைச்சல் இல்லாமல் இனபமாக வாழ்வீர்கள்----இந்த வெற்றிக்கு உன்னதமான இயக்கம்,உண்மையான இயக்கம் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் என கம்பீரமாக சொல்லுவேன்------
💥இந்த வழக்கை நடத்த எந்த ஒரு ஆசிரியரிடத்திலும் பத்து பைசா கூட என் அருமை தலைவர் அ.மாயவன் அவர்கள் பெறவில்லை என்பதையும் தெரிவித்துகொள்கின்றோம்
💥இந்த தீர்ப்பின் மூலம் 18000 ஆயிரம் தனியார் பள்ளி ஆசிரியர்களும்,6500 அரசு பள்ளி ஆசிரியர்களும் பயனடைய் இருக்கிறார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...
குரிப்பு:
****
சிறுபான்மையற்ற பள்ளிகளில் இது தான் கடைசி தகுதிதேர்வு என எழுதி வாங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றுள்ளுள்வோம்....அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பட்டுள்ளது----இனி எந்த ஒரு பட்டதாரி ஆசிரியரும் நிர்வாகத்து எழுதி தரவேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறோம்......
இவண்
மு.முருகேசன் மாவட்ட தலைவர்
(நிறுவனர்.அ.மாயவன் அவர்கள்)
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.திண்டுக்கல்

Saturday, March 25, 2017

டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 8 லட்சம் பேர்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று (மார்ச், 23) வரை மொத்தம் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 

Thursday, March 9, 2017

'டெட்' தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு

: 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், சுய விபரங்கள் இன்று வெளியாகின்றன. தமிழகத்தில், 2012 முதல், 2014 வரை, 'டெட்' தேர்வு முடித்தோர்,

Tuesday, November 22, 2016

தமிழகத்தில் ஆசிரியர் நியமனம் பற்றிய முக்கிய அறிவிப்பு..

புதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 1000க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு?


புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு.